தகுதி… தராதரம் இருக்கா?’ – தர்பூசணி திவாகரின் கேள்விக்கு பதிலடி வருமா? விஜய் சேதுபதி மௌனத்தை உடைப்பாரா?”

newproject 2025 10 30t101630 281 1761799630

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்று வாரங்களை கடந்துவிட்டு தற்போது நான்காவது வாரத்தில் நுழைந்துள்ளது. இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர், மேலும் ஒருவரே தன்னார்வமாக ஆட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில், வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் புதிய போட்டியாளர்கள் வீட்டில் களமிறங்க உள்ளனர். இதற்கிடையில், இந்த சீசனில் ரசிகர்களுக்கு அதிக எரிச்சலை ஏற்படுத்தும் போட்டியாளர்கள் என்ற பட்டியலை தயாரித்தால், முந்தைய அனைத்து சீசன்களையும் விட இந்த சீசனே ஓவர் டேக் செய்யும் என்பதில் ஐயமில்லை.

newproject 2025 10 30t101701 156 1761799629

இந்த சீசனில் கவனம் ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவராக “வாட்டர்மெலன் ஸ்டார்” திவாகர் திகழ்கிறார். அவரை எப்படி தேர்வு செய்தீர்கள் என்று ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். ஆனால், சீசன் தொடங்கிய முதல்நாளிலேயே திவாகர் தனது துறையில் திறமையானவர் என்பதை நிரூபித்தார். அவரது துறையைச் சார்ந்த கேள்விகளுக்கு துல்லியமாக பதில் அளித்தார் என்றும் விஜய் சேதுபதி பாராட்டியிருந்தார். விஜய் சேதுபதி தாமே சான்றிதழ் அளித்திருந்தபோதிலும், திவாகரின் ஆட்டத்தில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லை — மாறாக ரசிகர்களுக்கு எரிச்சல்… எரிச்சல்… எரிச்சல்!

அதாவது, திவாகர் தனியாக இருந்தால் கேமரா முன் நின்று ரீல்ஸ் செய்யும் பழக்கம் உடையவர். ஆனால் அவருடன் மற்ற போட்டியாளர்கள் இருந்தால்தான் அவரது கண்டென்ட் சிறப்பாக வேலை செய்கிறது. இந்நிலையில், சக போட்டியாளர்களுடன் சிறிய வாக்குவாதம் அல்லது பிரச்சனை ஏற்பட்டாலே, தர்பூசணி திவாகர் உடனே “உனக்கு என்ன தகுதி இருக்கு?”, “நீ என்னோட செருப்புக்கு சமம்”, “நீ என்னோட கால் தூசிக்குச் சமம்”, “உனக்கு என்ன தராதரம் இருக்கு?” போன்ற அவமரியாதை பேச்சுகளிலும் கேள்விகளிலும் ஈடுபடுவார்.

தர்பூசணி திவாகரின் இந்த பேச்சுகள் புதியவை அல்ல — கடந்த இரண்டு, மூன்று வாரங்களாகவே அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் மற்ற போட்டியாளர்கள் பலரும் அதிருப்தியடைந்து கண்டனமும் தெரிவித்துள்ளனர். இதை குறித்து வார இறுதியில் விஜய் சேதுபதி பேசுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் இந்த விஷயத்தை முற்றிலுமாக தவிர்த்து சென்றுவிட்டார். தன்னை பயன்படுத்தி கானா வினோத் ஃபேமஸ் ஆக முயற்சிக்கிறார் என கூறிய திவாகரின் பேச்சை மட்டும் விஜய் சேதுபதி கண்டித்தார். ஆனால் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகரின் “தகுதி–தராதரம்” பேச்சுகள் குறித்து அவர் ஒரு வார்த்தையும் பேசவில்லை.