Last Updated:
பெங்களூருவில் பிரபல நடிகைக்கு ஃபேஸ்புக் மூலம் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த நபரை போலீசார் தட்டித் தூக்கியுள்ளனர்.
பெங்களூருவில் பிரபல நடிகைக்கு ஃபேஸ்புக் மூலம் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த நபரை போலீசார் தட்டித் தூக்கியுள்ளனர். ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை ஏற்க மறுத்ததால் எல்லை மீறியவருக்கு போலீஸ் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
கர்நாடகா மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை தான் ரஜினி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைக்கு, ரசிகர் என்ற போர்வையில் இளைஞர் ஒருவர் டார்ச்சர் கொடுத்துள்ளார். ஃபேஸ்புக்கில் வெவ்வேறு ID-களில் இருந்து வந்த போட்டோக்கள், விரும்பத்தகாத மெசேஜ்கள் மூலம் கொதித்தெழுந்த நடிகை, போலீஸ் ஸ்டேஷன் படியேறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் ரஜினி. 41 வயதான இவர் டி.வி. சீரியல்களில் நடித்து வருகிறார். இதன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பரிட்சையமானவராக உள்ளார். இதனால், நடிகையில் ஃபேஸ்புக்கில் நாள்தோறும் ஏராளமான ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட்கள் வந்துள்ளன.
ஆனால், தனக்கு நன்கு தெரிந்த நண்பர்களிடம் இருந்து வரும் ரெக்வெஸ்ட்களை மட்டுமே அக்செப்ட் செய்துள்ளார். இந்த நிலையில் ஒரே நபர் தொடர்ந்து ரிக்வெஸ்ட் கொடுத்து தொல்லை அளித்துள்ளார். முதலில் அந்த இளைஞர் நவீன்ஸ் என்ற ID-யில் இருந்து ரிக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அதை பார்த்ததும் நடிகை ரஜினி, டெலீட் செய்துள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர், நடிகைக்கு ஆபாச போட்டோக்கள் அனுப்பியுள்ளார். அத்துடன், கேட்கவே காது கூசும் அளவிற்கு ஆபாசமான மெசேஜ்களையும் அனுப்பியுள்ளார். அதை நடிகை கண்டுகொள்ளாத போதும், நாள்தோறும் புதுப்புது ID-களில் இருந்து இளைஞர் இம்சை செய்துள்ளார். பொறுத்து பொறுத்து பார்த்த நடிகை வேறு வழியின்றி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினர். விசாரணையில், நடிகைக்கு டார்ச்சர் கொடுத்தவர் பெங்களூருவைச் சேர்ந்த நவீன் மோன் என்பது தெரியவந்தது. இவர், சர்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிரபல சீரியல் நடிகைக்கு ஃபேஸ்புக் மூலம் ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
November 04, 2025 3:54 PM IST
