Last Updated:
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தின் முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘மதராஸி’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கும் இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவருடைய 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட விஷயங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி வருதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வரும் நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘நெஞ்சுக்குழி தொட்டு போகுற அடி அலையே அலையே’ என தொடங்கும் இந்தப் பாடலை ஷான் ரோல்டன், தீ இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை ஏகாதசி எழுதியுள்ளார்.
பாடலை பொறுத்தவரை சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா இடையிலான காதல் பாடலாக இந்தப் பாடல் உருவாகியுள்ளது. வின்டேஜ் கெட்டப்புகளில் இருவரும் கவனம் ஈர்க்கின்றனர். ஷான் ரோல்டன் குரலும் – தீ குரலும் பாடலுக்கு பலம் சேர்க்கின்றன. முழு பாடல் 6-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
November 04, 2025 5:34 PM IST
